செல்வம், வெற்றி கிடைக்க முன்னோர்களின் மண்டை ஓட்டை அலங்கரித்து வழிபடும் பொலிவியா மக்கள்

லாபெஸ் : பொலிவியாவில் முன்னோர்களை போற்றும் வகையில் மண்டை ஓடு திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொலிவியாவின் லாபாஸ் நகரில் உள்ள மையானத்தில் பாரம்பரிய மண்டை ஓடு திருவிழா கொண்டாப்பட்டது. பொலிவியாவின் லா பாசிலில் உள்ள பழமையான மயானத்தில் மண்டை ஓடு திருவிழா ஆண்டுதோறும் நவம்பரில் கொண்டாடப்படுகிறது.

இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு முன்னோர்களின் மண்டை ஓட்டை அலங்கரித்து, பூ வைத்து, கண்ணாடி அணிவித்து விதவிதமான அலங்காரம் செய்துகொண்டு வந்து வழிபட்டனர். சிலர் மண்டை ஓடுகளுக்கு சிகரெட் வைத்தும் வழிபட்டனர். முன்னோர்களின் மண்டை ஓடுகளை பாதுகாத்து அதனை அலங்கரித்து அவர்களை நினைவு கூறுவதன் மூலமாக தங்கள் வாழ்வில் செல்வம், வெற்றி, வளம் கிடைக்கும் என பொலிவியா மக்கள் நம்புகின்றனர். தொடர்ந்து வழிபாட்டில் ஈடுபட்ட மக்கள் முன்னோர்களின் மண்டை ஓடுகள் வைக்கப்பட்ட பெட்டிகளுடன் ஆடி, பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: