உத்திரமேரூர் அருகே 11ம் நூற்றாண்டு சோழர்கால சூரியன் சிலை கண்டெடுப்பு

சென்னை: உத்திரமேரூர் அருகே, தொல்லியல்  ஆய்வுக் குழுவினரின் தேடலில் 11ம் நூற்றாண்டை சார்ந்த சோழர் கால சூரியன் சிலை கண்ெடடுக்கப்பட்டது.

சோழர் காலத்தில், அரசு போர்களத்தில் வெற்றி பெற வேண்டி, கொற்றவை தெய்வம் முன்பு வீரன் வழிபாடு நடத்தி, தனது தலையினை தானே அறுத்துக்கொள்ளும் சடங்கு நடந்துள்ளது. இது, அரிகண்டம் என அழைக்கப்பட்டுள்ளது.இதுபோன்ற பழமையான சிலை, உத்திரமேரூர் அடுத்த அனுமந்தண்டலம் கிராமத்தில் இருப்பதாக தொல்லியல் துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து தொல்லியல் துறை சார்பில் சிலையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், திருப்புலிவனம், திருவானைக்கோவில் போன்ற பகுதிகளிலும் இச்சிலைகள் போன்றே சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தில் சந்தைமேடு பகுதியில் பழமை வாய்ந்த மார்பளவு கற்சிலை ஒன்று இருப்பதாக தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் தொல்லியல் துறை ஓய்வு பெற்ற பேராசிரியர் மார்க்சியா காந்தி தலைமையிலான குழுவினர்  மானாம்பதி கிராமம் சென்று, அந்த சிலையை ஆய்வு செய்தனர். அதில், 11ம் நூற்றாண்டு சூரியன் சிலை என தெரிந்தது.மேலும் அந்த கிராமத்தில் உள்ள ஒரு விநாயகர் கோயிலில் உள்ள சிலைகளையும் ஆய்வு செய்தனர். அப்போது, 16ம் நூற்றாண்டை சேர்ந்த நவகண்ட சிலை, முகம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த சிலைகள் இருக்கும் இடத்தை தோண்டி ஆய்வு மேற்கொண்டால் மேலும் பல்வேறு அரியவகை வரலாற்று சின்னங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: