இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்கப்படும் என்ற செய்திக்கு ராஜபக்சே மறுப்பு

கொழும்பு : இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்கப்படும் என்ற செய்திக்கு ராஜபக்சே மறுப்பு தெரிவித்துள்ளார். பெரும்பான்மை உள்ளதால் கலைக்கப்படாது என பிரதமர் ராஜபக்சே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முன்னதாக இலங்கை நாடாளுமன்றத்தை நள்ளிரவில் கலைக்க சிறிசேனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. புதிய அரசுக்கு பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல் என்பதால் கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. சிறிசேனா திட்டமிட்டுள்ளதாக பரவிய செய்தியால் கொழும்பு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜபக்சேவுக்கு எதிரிப்பு

சிறிசேனவால் நியமிக்கப்பட்ட இலங்கை பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிரிப்பு தெரிவித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது. இலங்கை அதிபர் சிறிசேனவை அவரது இல்லத்திலேயே சந்தித்து தங்கள் முடிவை கூறிவிட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் குழப்பம் ஏற்படுத்திய அதிபர்

சட்டவிரோத சதிமுயற்சியால் அதிபர் சிறிசேனா  நாட்டை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த எம்.பி. அஜித் பெரேரா குற்றம் சாட்டியுள்ளார். 2-வது சட்டவிரோத அரசியல் சதித்திட்டத்தை முன்னெடுப்பதாக கூறியுள்ளார்.  மேலும் தவறான அரசியல் முடிவுகளை எடுத்து நாட்டை அழிக்க முயற்சி செய்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: