பாக்.கில் தலிபான்களின் ராஜகுரு சுட்டுக்கொலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரபல இஸ்லாமிய மதகுரு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பாகிஸ்தானின் பிரபல மதகுரு மவுலானா சமியுல் ஹக் (82). கைபர் பாக்துன்கவா மாகாணத்தின் அகோரா கட்டாக் நகரை சேர்ந்த இவர், இஸ்லாமிய மத கல்லூரியான தருல் உலும் ஹக்கானியாவின் தலைவராக இருந்து வந்தார். தலிபான் தீவிரவாதிகளின் ஞானகுருவாக கருதப்படும் இவர், ராவல்பிண்டியில் உள்ள காரிசான் நகரில் உள்ள ஒரு வீட்டில் நேற்று தங்கியிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர். ஜமியாத் உலேமா ஐ இஸ்லாம் சமி கட்சியின் தலைவராகவும் இருந்து வந்த மவுலானா கொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. அவர் கொல்லப்பட்ட தகவலை கட்சியின் பெஷாவார் பகுதி தலைவர் உறுதி செய்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: