சென்னையில் நாளை பாமக மாணவர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுகம்: ஜி.கே.மணி அறிவிப்பு

சென்னை: பா.ம.க மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுகவிழா மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளதாக அக்கட்சி தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: பா.ம.க அமைப்பான பாட்டாளி மாணவர் சங்கத்துக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் அறிமுக நிகழ்ச்சி மற்றும் மாணவர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்  சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் பொதிகை தொலைக்காட்சி நிலையத்திற்கு எதிரில் உள்ள  அண்ணா கலையரங்கில் 3ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். பாட்டாளி மாணவர் சங்கத்தின் தலைவர்  அன்புமணி கூட்டத்திற்கு தலைமை ஏற்கிறார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். மாணவர் சங்கத்துக்கு  புதிதாக நியமிக்கப்பட்ட 1500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர். மாணவர் சங்க பணித்திட்டங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து  இதில் விவாதித்து முடிவெடுக்கப்பட உள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: