ரிசர்வ் வங்கி விவகாரம் கருத்துக்கூற மறுத்து ஜெட்லி நழுவல்

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு இடையே நடந்த தகவல் தொடர்புகள் ஒரு போதும் வெளியிடப்படவில்லை என ஜெட்லி தெரிவித்தார்.

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் உச்சம் பெற்றுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு மேல் கூறுவதற்கு எதுவும் இல்லை என்றார்.

ரிசர்வ் வங்கி சட்டத்தின் 7வது பிரிவை பயன்படுத்தி மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு பிறப்பித்ததா என்று கேட்டதற்கு, ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடந்த ஆலோசனை விவரங்கள் ஒரு போதும் வெளிடப்பட்டது கிடையாது. இறுதியான முடிவு மட்டுமே வெளியிடப்படும் என்றார். நிதியமைச்சக அறிக்கையில், ரிசர்வ் வங்கி சட்டப்பிரிவு 7ஐ பயன்படுத்தியது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இதுபோல், ஜெட்லி இதற்கு பதில் கூறாமல் மழுப்பிவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: