18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை..... தேர்தலை சந்திக்கிறோம்: டிடிவி தினகரன் திட்டவட்டம்

சென்னை: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க தயார் என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இடைத்தேர்தலை சந்திக்க அமமுக முடிவு செய்துள்ளது. 20 தொகுதிகளிலும் அதிமுகவால் டெபாசிட் கூட பெற முடியாது.  ஆர்.கே.நகர் தேர்தல் போல் தோல்வியடைவர். மண்குதிரை யார் என்பதை எங்கு தேர்தல் நடந்தாலும் மக்கள் நிரூபிப்பார்கள்.

பட்டாசு விவகாரம் குறித்து தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சிபிஐ விசாரணைக்கு எதிராக மேல்முறையீடு செய்ததுபோல், பட்டாசு வழக்கிலும் மேல்முறையீடு செய்ய வேண்டும் என தினகரன் கூறியுள்ளார். முன்னதாக 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதையடுத்து, 3-வது நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது. அண்மையில் தீர்ப்பளித்த 3-வது நீதிபதி தகுதிநீக்கம் செல்லும் என தீர்ப்பளித்ததால் 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: