அமெரிக்காவில் மனிதசங்கிலி அமைத்து ஆற்றை கடந்த பொதுமக்கள்: பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

அமெரிக்கா: மத்திய அமெரிக்க நாடான எல் சல்வாடரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சுச்சியாக் ஆற்றை மனித சங்கிலி அமைத்து கடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ஏழ்மை மற்றும் வன்முறையால் எல்சல்வாடா நாட்டு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மற்ற நாடுகளுக்கு அவர்கள் இடம் பெயர்வது அண்மைக் காலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் இருந்து வடஅமெரிக்க நாடான மெக்ஸிகோவிற்கு ஏராளமானோர் அகதிகளாக படையெடுத்து வருகின்றனர்.

மேலும் ஆயிரக்கணக்கானோர் ஒருவருக்கொருவர் மனித சங்கிலி அமைத்து சுச்சியாக் ஆற்றை கடந்துள்ள காட்சிகள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில், ரப்பர் குண்டுகள் துளைத்து இளைஞர் ஒருவர் பரிதமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அனுமதி இல்லமால் எல்லை தாண்டுவதை தடுக்க அங்கு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: