பிரெட் துண்டுகளால் மோனாலிஸா ஓவியத்தை உருவாக்கி அசத்திய ஜப்பான் மாணவர்கள்

ஃபுகுகோகா: புகழ்பெற்ற லியோனார்டோ டா வின்சியின் மோனாலிஸா ஓவியத்தை, ஜப்பானிலுள்ள ஃபுகுகோகா உணவு கலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 2,200 பிரெட் துண்டுகளைக் கொண்டு மொசேக் ஆர்ட்டாக உருவாக்கியுள்ளனர். இந்த மோனாலிஸா மொசேக் ஆர்ட்டை 30 பேர் கொண்ட மாணவ குழுவினர் இணைந்து செய்துள்ளனர். இந்த ஆர்ட் ( 2.4 அடி) உயரமும் மற்றும் (1.5 அடி) அங்குலமும் கொண்டுள்ளது. இதை உருவாக்க அவர்களுக்கு இரண்டு மாதங்கள் ஆகியுள்ளது.

இதுபற்றி பெருமையுடன் கூறிய மாணவர்கள் இந்த மோனாலிஸா மொசேக் ஆர்ட்டை தயாரிக்க தாங்கள் வெள்ளை மற்றும் கருப்பு கோக்கோ கேக்குகளை பயன்படுத்தியதாக குறிப்பிட்டனர். இந்த ஆர்ட்டில் பயன்படுத்தப்பட்ட பிரேட் துண்டுகள் காய்ந்து போக தொடங்கியவுடன் அவற்றை டிரிம் செய்து பயன்படுத்தியதாக கூறினர். ஓவியத்தில் உள்ளது போல் மொசேக் ஆர்டை செய்ய நாங்கள் பிரொட் துண்டுகளை வெவ்வேறு கால அளவு அவனில் வைத்து சரியான வண்ணங்களைக் கொண்டு உருவாக்கியதாக குறிப்பிட்டுள்ளனர். உணவு கலைப்பள்ளி மாணவர்களால் செய்யப்பட்ட இந்த அற்புத வேலைபாடு, அவர்களின் கல்லூரி ஆண்டு விழாவில்மக்கள் பார்வைகாக வைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: