குடியரசு தின அணிவகுப்பிற்கு சிறப்பு விருந்தினராக யாரை அழைப்பது: வெளியுறவுத் துறை ஆலோசனை

டெல்லி: குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க சிறப்பு விருந்தினராக யாரை அழைப்பது என்று அதிகாரிகள் அவசரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். குடியரசு தின சிறப்பு விருந்தினராக பங்கேற்க கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க இயலாது என்று கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஆப்பிரிக்க நாட்டின் தலைவர் ஒருவரின் பெயர் உள்பட மூன்று பேரின் பெயர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்க பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. மிகவும் குறைந்த காலமே எஞ்சியுள்ள நிலையில், விரைவில் இது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2019 ஜனவரி 26-ம் தேதி நாட்டின் 70-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: