இடைத்தேர்தலை சந்திப்பதா, மேல்முறையீடு செய்வதா? தகுதி நீக்கப்பட்ட 18 பேரும் குழப்பத்தில் உள்ளனர்: அதிமுக எம்பி வைத்திலிங்கம் பேட்டி

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது.  கூட்டம் முடிந்தபிறகு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளுக்கு அ.தி.மு.க. பொறுப்பாளர்களை அறிவித்து இருக்கிறோம். இடைத்தேர்தல் தேதி அறிவித்தவுடன் 20 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து பணிகளையும் அதிமுக ஏற்கனவே தொடங்கிவிட்டது.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் திரும்ப வேண்டும் என்ற அழைப்பின் பேரில் பலர் இணைந்து வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் 90 சதவீதம் பேர் எங்களுடன் வந்துவிடுவார்கள். டி.டி.வி.தினகரனை நாங்கள் அழைக்கவில்லை. அவரை தவிர மற்றவர்கள் அனைவரையும் அழைக்கிறோம். அதிமுகவுக்கு எதிராக உள்ள 3 எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து பதில் வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம். அவர்கள் மனம் திருந்தி வருவார்கள் என்று நம்புகிறோம். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் எங்களுக்கு நியாயம் கிடைத்து இருக்கிறது. இதில் தேர்தலை எதிர்கொள்வதா, மேல்முறையீடு செய்வதா? என்பதில் டி.டி.வி.தினகரன் தரப்பினர் குழப்பத்தில் இருக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: