மக்கள் குறை தீர்க்க செல்போன் செயலி: பரந்தாமன் வாக்குறுதி

சென்னை: எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் பரந்தாமன் புரசைவாக்கம், புளியம்தோப்பு, சூளை, சேத்துபட்டு, புதுப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்றும், பூங்கா, விளையாட்டு மைதானம் என அனைத்து இடங்களிலும் மக்களை நேரடியே சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பரந்தாமனை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி, மத்திய சென்னை எம்பி தயாநிதிமாறன் ஆகியோரும் வாக்கு சேகரித்து வருகின்றனர். நேற்று காலை எழும்பூர் காவல்நிலையம் அருகே மக்களிடம் பரந்தாமன் வாக்கு சேகரித்தார். அப்போது, மக்கள் சால்வை அணிவித்து, ஆரத்தி எடுத்து, மலர்தூவி அவரை வரவேற்றனர். அங்கிருந்த தூய்மை பணியாளர்கள் வேட்பாளரை பார்த்ததும், தங்களது குறைகளை தெரிவித்தனர். அதனை கேட்ட பரந்தாமன், தூய்மை பணியாளர்களுக்கு பல நலதிட்டங்களை திமுக தலைவர் அறிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்ததும் அவை நிறைவேற்றப்படும், என்றார். தொடர்ந்து, நேற்று மாலை 104வது வட்டம் சண்முகராயன் தெரு, பொன்னன் தெரு சந்திப்பில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தொகுதி மக்களின் குறைகளை கேட்க தொகுதியில் 6 அலுவலகம் அமைக்க உள்ளேன். மேலும் மக்களின் குறைகளை உடனே தீர்க்க செல்போன் செயலி உருவாக்கப்பட உள்ளது, என்று கூறினார். மேலும் முதல் தலைமுறை வாக்காளர்களான இளைஞர்களிடமும் வாக்கு சேகரித்தார்….

The post மக்கள் குறை தீர்க்க செல்போன் செயலி: பரந்தாமன் வாக்குறுதி appeared first on Dinakaran.

Related Stories: