முன்னாள் துணை அதிபருக்கும் குண்டு பார்சல் வாஷிங்டன்: அமெரிக்காவில் முன்னாள் அதிபர்

ஒபாமா, ஹிலாரியை தொடர்ந்து முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் வீட்டுக்கும் வெடிகுண்டு அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் வீடு வாஷிங்டன்னிலும், முன்னாள் அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் வீடு நியூயார்க்கிலும் அமைந்துள்ளது. இவர்களுக்கு வரும் கடிதங்கள் மற்றும் பார்சல்களை உளவுதுறை சோதனை செய்தபின்னரே வழங்கும். இந்நிலையில் நேற்று முன்தினம் ஒபாமா மற்றும் ஹிலாரி ஆகியோருக்கு பார்சலில் வெடிகுண்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வழக்கமான சோதனையின்போது வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென்னுக்கும் வெடிகுண்டு பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்களுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்கு அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: