மெப்ஸ் வளாக நிறுவனங்களில் டெங்கு கொசு புழுக்களை ஒழிக்காவிடில் அபராதம்: கலெக்டர் எச்சரிக்கை

தாம்பரம்: தாம்பரம் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்தும், விழிப்புணர்வு வாகனம் மூலம் பிரசாரம் செய்தும் வருகின்றனர். இந்நிலையில், தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் வளாகத்தில் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா திடீர் ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள நிறுவனங்களின் திறந்தவெளி பகுதிகளில் டயர் மற்றும் பழைய பொருட்களில் தேங்கிய மழைநீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவது தெரிந்தது. அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் நிறுவனங்களிடம் கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

மேலும், வரும் 24ம் தேதிக்குள் இங்குள்ள நிறுவனங்கள் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில், 25ம் தேதி அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும், என நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: