தஞ்சையில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1033வது சதய விழா கோலாகலம் : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தஞ்சாவூர் : தஞ்சாவூரை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த மாமன்னன் ராஜராஜ சோழனின் 1033வது பிறந்தநாளை சதய விழாவாக தஞ்சை மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். மூன்று நாட்கள் கொண்டாடும் இந்த விழாவானது தேவார, திருவாசக இசையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சதய விழாவை முன்னிட்டு அரசு சார்பில் தஞ்சை பெரிய கோயிலில் இருந்து மேளதாகங்களுடன் ஊர்வலமாக வந்து ராஜராஜ சோழனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்த மாமன்னன் ராஜராஜ சோழனை நினைவுக்கூறும் வகையில் இந்த விழாவானது ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை காண தஞ்சை மாவட்ட மக்கள் மட்டுமின்றி அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் மக்கள் வருகை தந்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகத்தினர் விழா ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்துள்ளனர். சதய விழாவையடுதத்து தஞ்சை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்டுள்ளன. நாட்டுபுற கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு மங்கல இசைகளுடன் சதய விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 60 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் ரூ.150 கோடி மதிப்புள்ள ராஜராஜ சோழன் மற்றும் லோக மாதேவி சிலைகள் மீட்கப்பட்டதால், இம்முறை விழா வெகுசிறப்பாக நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 48 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேக, ஆராதனையுடன் சதய நிறைவு விழா நாளை நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: