தீவிரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சுமுக பேச்சுவார்த்தை : ரவீஷ் குமார்

டெல்லி : ஹெச்.ஒன்.பி. விசா தொடர்பான பிரச்சனைகளை அமெரிக்காவின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;  ஈரானுக்கு, அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையினால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் வராது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் பாம்ப்பியோ கூறியிருப்பதாகவும் ரவீஷ்குமார் கூறினார்.

பிரான்சிடம் இந்தியா வலுவான உறவை கொண்டுள்ளது. இந்தியாவின் மிக முக்கிய நட்பு நாடுகளில் பிரான்சும் ஒன்று. இந்தியா- பிரான்சு இடையேயான உறவில் எந்த தொய்வும் இல்லை.  பாகிஸ்தான் விவகாரத்தை பொறுத்தவரை, பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக நடத்த முடியாது என்பதில் தெளிவாக உள்ளோம். இதனால், தான் இந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.

தங்கள் மண்ணில் இருந்து இயக்கப்படும் தீவிரவாத குழுக்கள் மீது உறுதியான நடவடிக்கையை பாகிஸ்தான் எடுத்தால் மட்டுமே சுமுக பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றும், அவர் தெரிவித்தார். மேலும் இலங்கையுடன் வலுவான நல்லுறவை கொண்டுள்ளோம். இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கை பிரதமர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என்று தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: