இன்ஜினியரிங், தொழில்நுட்ப துறைக்கு அதிகளவில் பெண்கள் வரவேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு

புதுடெல்லி: மத்திய பொதுப் பணித்துறை பயிற்சி இன்ஜினியர்கள் 97 பேர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை டெல்லியில் நேற்று சந்தித்தனர். அவர்களிடம் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: இங்கு வந்துள்ள 97 பேரில் 22 பேர் பெண்கள். கிட்டத்தட்ட 4ல் ஒரு பகுதி பெண்கள் உள்ளனர். இது வரவேற்கத்தக்கது. அரசுத் துறையில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் வருவது ஊக்குவிக்கப்பட வேண்டும். குறிப்பாக இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் அதிக இளம்பெண்கள் தேவை. வேகமாக வளரும் உலக பொருளாதாரத்தில் இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது.

கடந்த காலாண்டில் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் லட்சிய திட்டங்களான மேக் இன் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி, டிஜிட்டல் இந்தியா, தூய்மை திட்டம் போன்றவை உங்கள் முயற்சிகள் இல்லாமல் வெற்றி பெற முடியாது. நீங்கள் உருவாக்கும் கட்டிடங்கள், சாலைகள் மற்றும் இதர கட்டுமானங்கள் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக்கவும், எரிசக்தியை குறைக்கும் விதத்திலும் இருக்க வேண்டும். நீங்கள் கட்டும் அலுவலகங்கள், சாலைகள், குடியிருப்புகள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் விதத்தில் இருக்கட்டும். இன்ஜினியர்களும், கட்டிடகலை நிபுணர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: