இன்னொரு கொடியுடன் சேர்ந்தா, தனியாகவா என விரைவில் முடிவு தமிழகத்தில் காவி கொடி நிச்சயமாக பறக்கும்: தமிழக பாஜ தலைவர் பேட்டி

சென்னை: தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தி.நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி: பஞ்சாப்பில் காங்கிரஸ் அமைச்சர், தமிழகத்தை விட பாகிஸ்தானுக்கு போவது சிறந்தது. தமிழ்நாட்டு உணவு பழக்கத்தை விட பாகிஸ்தான் உணவு பழக்கம் சிறந்தது. தமிழ்மொழியை விட பாகிஸ்தான் மொழி சிறந்தது என்று வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். இதுதொடர்பாக தமிழகத்தில் இருந்து ஒருவர் கூட குரல் எழுப்பவில்லை. சித்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். சித்து தமிழ்மொழியையும், ெதன் இந்தியரையும் ஒட்டுமொத்தமாக அவமதித்துள்ளார். இதை பாஜ கடுமையாக கண்டிக்கிறது.

சித்துவின் பேச்சை கண்டித்து முதல்கட்டமாக நாளை (இன்று) காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதன் பிறகு பாஜ இளைஞர் அணி சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். முறைகேடு என்றால் யார் என்றாலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதற்கு பின்பு என்ன நடவடிக்கை என்று சட்டம் சொல்கிறதோ அதை செய்ய வேண்டும். குற்றம் சாட்டப்பட்டதால் பதவி விலக தேவையில்லை. நடிகர் விஜய், விஷால் அரசியலுக்கு வரட்டும். வந்த பிறகு பதில் சொல்கிறேன். தமிழகத்தில் பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை நிச்சயமாக காவி கொடி பறக்கும். இன்னொரு கொடியுடன் சேர்ந்து பறக்குமா? தனியாகவா? என்பதை பின்னர்தான் முடிவு செய்வோம். நாங்கள் அமைக்கும் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: