அய்யா வைகுண்ட சுவாமி வீதியுலா

சென்னை: மணலி புதுநகர் அய்யா வைகுண்ட வரம்பொருள் தர்மபதியில் 10 நாள் திருவிழா நடைபெறுகிறது. 8ம் நாள் விழாவில் அய்யா குதிரை மீது அமர்ந்து பதிவலம் வந்து மக்களுக்கு அருள்பாலித்தார். இதில்,  கலந்துகொண்ட 20 ஆயிரம் பக்தர்களுக்கு 3 வேளை அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று காலை 11.30 மணிக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. அப்போது, அய்யா திருத்தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.  இதையொட்டி, இன்று காலை 7 மணி தொடங்கி மறுநாள் காலை 7 மணி வரை அன்னதானம் நடைபெறும். நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வி.ராதிகாசெல்வி, ஏ.நாராயணன், எஸ்.ஆர்.ஜெயதுரை, ராயபுரம் மனோ, கொட்டிவாக்கம் முருகன், ஏ.கதிரேசன்,  டி.வெங்கசேடன் ராஜா மற்றும் ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: