கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை: 3-வது முறையாக போட்டி.!

சென்னை: கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். கொளத்தூரில் 3-வது முறையாக போட்டியிடும் நிலையில் தற்போது மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தல் பரப்புரையில் திமுகவினர் கன்னியக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி விடக்கூடாது. தேர்தல் பிரச்சாரத்தில் கண்ணியம் காக்க வேண்டும். மேலும், திமுகவின் மரபையும் மாண்பையும் மனதில் வைத்து செயல்பட தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுகவினரின் பேச்சுக்களை திரித்து வெட்டி – ஒட்டி தவறான பொருள்படும்படி வெளியிடுகிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாத வகையில் கவனத்துடன் சொற்களை பயன்படுத்த வேண்டும் என்றும், கண்ணியக்குறைவான பேச்சுக்களை கட்சித் தலைமை ஒருபோதும் ஏற்காது, உணர்ச்சிவசப்பட்டு கண்ணியக்குறைவான பேச்சுக்களை பேசக்கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர் இன்றிரவு 10 மணி வரை கொளத்தூர் கிழக்கு பகுதியில் உள்ள காசி விஸ்வநாதன் கோவில், அன்னை சத்யா நகர், அயனாவரம் பஸ் நிலையம், ஆண்டர்சன் சாலை, ராகேவந்திரா கோவில், திருக்காகுளம் சலவை செய்யும் இடம், ரெயில்வே ரோடு, மைலப்ப தெரு, பங்காரு தெரு ஜங்‌ஷன் ஆகிய இடங்களில் மு.க. ஸ்டாலின் ஆதரவு திரட்டுகிறார்….

The post கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை: 3-வது முறையாக போட்டி.! appeared first on Dinakaran.

Related Stories: