சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பணியிடை நீக்கம்

சத்தியமங்கலம்: பெண் வக்கீலுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக ராஜவேலு பணியாற்றி வந்தார். நீதிமன்றத்திற்கு வரும் பெண் வழக்கறிஞர் ஒருவரிடம் நீதிபதி ராஜவேலு, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாகவும், செல்போனில் அழைத்து ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனடிப்படையில், சத்தியமங்கலம் அட்வகேட் அசோசியேசன் சார்பில், ஈரோடு மாவட்ட குற்றவியல் நீதிபதி மோகன் மற்றும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி உமாமகேஸ்வரி ஆகியோரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், நேற்று காலை சத்தியமங்கலம் நீதிமன்றத்திற்கு நேரடியாக சென்று நீதிபதி ராஜவேலுவை பணியிடை நீக்கம் செய்ததற்கான உத்தரவை வழங்கினர். இதையடுத்து குற்றவியல் நீதிமன்றத்திற்கு பொறுப்பு நீதிபதியாக சத்தியமங்கலம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன்  தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: