எச்.ராஜா, எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் வேடிக்கை மக்களின் குரலை பதிவு செய்பவர்கள் மீது வழக்கு: தமிழக அரசு மீது ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சென்னை: எச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோரை கைது செய்யாமல் தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்  குற்றம் சாட்டினார்.  நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதா மறைவுக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், சென்னை தாராப்பூர்  டவர் அருகே, மார்க்சிஸ்ட் சார்பில் போராட்டம் நடந்தது. தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேர் மீது  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு  தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் வழக்குக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதை தொடர்ந்து நேற்று எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜி.ராமகிருஷ்ணன் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி உயர் நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவை எழும்பூர் 14வது  குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை முன்பு சமர்ப்பித்தார். அதை நீதிபதி, ஏற்றுக்கொண்டு வழக்கின் மீது மேலும் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. பின்னர், ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:நீதிமன்றம் மீதும், காவல்துறை மீதும் அவதூறு கருத்துகளை தெரிவித்து வரும் எச்.ராஜா, எஸ்.வி. சேகர் போன்றோரை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் இந்த அரசாங்கம், மக்களின் குரலை பதிவு  செய்து போராட்டத்தில் ஈடுபடும் என்னை போன்றோர் மீது வழக்கு பதிவு செய்து அடக்குமுறையை பிரயோகித்து வருகிறது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: