கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு பிஷப்பை 6-ம் தேதி வரை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவு

திருவனந்தபுரம்: கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட பிஷப் பிராங்கோவை 6ம் தேதிவரை சிறையில் அடைக்க பாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.கேரள மாநிலம் குரவிலங்காட்டை சேர்ந்த கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஜலந்தர் பிஷப் பிராங்கோ கைது செய்யப்பட்டார். அவரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதன்படி பிஷப் பிராங்கோவை கஸ்டடியில் எடுத்த போலீசார் கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் விசாரணையை தொடங்கினர். இதில் பிஷப்பிடம் இருந்து போலீசாரால் எந்த தகவலும் பெற முடியவில்லை.

போலீசார் அவரை குரவிலங்காட்டில் உள்ள மடத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அங்கு வைத்தும் வழக்கிற்கு தேவையான எந்த தகவலும் அவர் தெரிவிக்கவில்லை. போலீசார் கேட்ட கேள்விகளுக்கு அவர் சிரித்தபடி மவுனமாக இருந்தார்.

2 நாள் விசாரணையின் ேபாதும் பிஷப்பிடம் இருந்து எந்த குறிப்பிடத்தக்க விவரங்களையும் பெற முடியவில்ைல. இதையடுத்து அவரிடம் உண்மை கண்டறியும் ேசாதனை நடத்த போலீசார் தீர்மானித்துள்ளனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும் போலீசார் தீர்மானித்துள்ளனர்.

நீதிமன்றம் அனுமதித்த போலீஸ் காவல் நேற்று பிற்பகல் 2.30 மணியுடன் முடிவடைந்தது. இதையடுத்து நேற்று மதியம் 2 மணியளவில் பாலா நீதிமன்றத்தில் போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, தான் கைது செய்யப்பட்டபோது அணிந்திருந்த ஆடைகளை போலீசார் வலுக்கட்டாயமாக வாங்கினர். அதை பயன்படுத்தி போலியாக ஆவணம் தயாரிக்க போலீசார் முயற்சிப்பார்கள் என்று சந்தேகம் எழுந்துள்ளது என்று நீதிமன்றத்தில் கூறினார். அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. தொடர்ந்து 6ம் தேதிவரை பிஷப் பிராங்கோவை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே ஜாமீன் ேகாரி கேரள உயர்நீதிமன்றத்தில் பிராங்ேகா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இதையடுத்து பிஷப் பிராங்கோ பாலா சிறையில் அடைக்கப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: