கடனை திருப்பி செலுத்துவதை அமலாக்கப்பிரிவு தடுத்துவிட்டது : சொல்கிறார் மல்லையா

புதுடெல்லி:  வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த அமலாக்கப்பிரிவு தடுத்து விட்டதாக, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மல்லையா தெரிவித்துள்ளார்.கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உட்பட பல்வேறு வங்கிகளில் வாங்கி கடன் வட்டியுடன் சேர்த்து ₹9,000 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது. ஆனால், கடனை திருப்பி செலுத்தாத அவர் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். கடன் மோசடி செய்து விட்டு தப்பிச்சென்ற மல்லையாவை பொருளாதார குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று கோரி அமலாக்கப்பிரிவு, சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்குகளை விசாரிக்கும் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

 மல்லையா போன்ற போன்ற மோசடி குற்றவாளிகள் கடன் வாங்கி விட்டு வெளிநாடு தப்பிச்சென்றால் அவர்களது சொத்துக்களை முடக்கவும், இந்தியாவுக்கு நாடு கடத்தவும் புதிதாக சட்டம் கொண்டுவரப்பட்டது. அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த மனு மீது இந்த வழக்கில் மல்லையா சார்பில் பதில் மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது.அதில், பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடன்களை திருப்பிச்செலுத்த கடந்த சுமார் 3 ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டு வருகிறேன். ஆனால், ஒவ்வொரு முறை முயற்சி செய்யும்போதும் அமலாக்கப்பிரிவு இதற்கு தடையாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, இந்தியா வருவதற்கு தான் மறுக்கவில்லை. சட்டத்தை மதித்து வருகிறேன்.  ஆனால், பொருளாதார குற்றவாளியாக இந்தியாவில் கால்பதிக்க விரும்பவில்லை என மல்லையா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: