நிலக்கரியில் தனியார் நிறுவனத்துக்குகூடுதல் பணம்: எஸ்.எஸ்.சுப்ரமணியன் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில தலைவர்

மின்சார விநியோகத்தில் பல வகையில் மின்வாரியத்தில் முறைகேடுகள் நடக்கத்தான் செய்கின்றன. அவ்வப்போது குற்றச்சாட்டுகளை நாங்களும்  எழுப்புகிறோம். பல பிரச்னைகளுக்கு மெத்தன போக்கை சுட்டிக்காட்டுகிறோம். ஆனால், அது பற்றி உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதில்லை. நம் மின்சார உற்பத்தி  விஷயத்தில் பல குளறுபடிகள் நடந்து வருகின்றன. பல விஷயங்களில் ஊழல்  நடந்துள்ளது.  காற்றாலை ஊழல் குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். கடந்த 2016-17ம் ஆண்டில் மின்சார வாரியத்தின் வரவு செலவு  கணக்குகளை தணிக்கை செய்யும் போது தணிக்கையாளர் சொன்ன குறிப்பைத்தான் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தணிக்கையின் போது பல விஷயங்கள் மீது தணிக்கை  அறிக்கை வரும் போது, அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இழப்பை சரி செய்ய  எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்த இழப்பு குறித்து தணிக்கை குறிப்பு  வந்தவுடனேயே உரிய ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும். காற்றாலை மின் உற்பத்தியை பொறுத்தவரைக்கும் பிப்ரவரியில் ஆரம்பித்து செப்டம்பரில் நின்று விடும். 1  கோடியே 35 லட்சம் யூனிட் காற்றாலை ஓடாத காலத்தில் இவர்கள் வாங்கினார்கள் என்று குறிப்பிடுகின்றனர். ₹9.17 கோடி வருமானத்தை இழப்பு  ஏற்படுத்தியுள்ளனர். இந்த இழப்பு உறுதிபடுத்தப்பட்ட நிலையில், பணத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஊழல் செய்த கம்பெனி கடலூரில்  உள்ளது. அந்த நிறுவனம் மின்வாரியத்திடம் மின்சாரம் வாங்குகிறார்கள். அந்த நிறுவனம் காற்றாலையில் மின்சாரம் தயாரித்து வழங்கியதாகவும், அந்த  மின்சாரத்தை மின்வாரியம் தர வேண்டும் என்று பொய்யான தகவல்களை தந்திருக்கின்றனர். இதன் மூலம் மின்வாரியத்தை அந்த நிறுவனம் ஏமாற்றியுள்ளது.  இந்த நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 2 வருடத்திற்கு முன்பு அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தால் ₹300 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக தணிக்கையில் தெரிய வந்தது. அந்த இழப்பை கட்ட  வேண்டும் என்று தணிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த தணிக்கை குறித்து பத்திரிகைகளிடம் கொண்டு சென்ேறாம். அந்த இழப்பீடு வெளிவந்த பிறகு தான்  சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் மின்வாரியம் வசூலித்தது.   பல்வேறு நிலக்கரி சுரங்கங்களில் இருந்து துறைமுகத்திற்கு நிலக்கரி வந்த பிறகு அங்கிருந்து அனல் மின் நிலையத்திற்கு கொண்டு செல்வதற்குள்ளேயே பல தடவை  ஊழல் செய்கின்றனர்.  விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி இறக்குவதற்கு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு மின்வாரியம் கூடுதலாக  பணம் கொடுக்கப்பட்டிருப்பது என்று தணிக்கையில் குறிப்பிட்டிருப்பது உண்மை தான். தணிக்கை துறை,  நடந்த இழப்பை தான் வெளிக்கொண்டு வருகிறது.   அதனால் தான்  மின்வாரியத்தில் மின் உற்பத்தியில் இருந்து விநியோகம் வரை பல குளறுபடிகள் நடக்கின்றன. செயற்கையாக நிலக்கரி பற்றாக்குறையை ஏற்படுத்தி  இறக்குமதி செய்ய திட்டமிடுவதாக தெரிகிறது.  மின்சார வாரியத்திற்கு காற்றாலையில் 3188 மெகா வாட் மின்சாரம் வாங்குகின்றனர். மத்திய அரசின் தெர்மல் பவர் கார்பரேஷன் ஒரு யூனிட் ₹4.50க்கு தருகிறோம்  என்று கூறுகின்றனர். ஆனால், தனியாரிடம் ₹5.50க்கு வாங்குவோம் என்று அரசு கூறுகிறது. இதன் மூலம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதால் பல கோடி  ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.  இது போன்ற இழப்பை தடுக்க குறைந்த விலையில் மின்சாரம் வாங்க வேண்டும். இதன் மூலம் மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குவதை தடுக்க  முடியும். மின்வாரியத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவதன் மூலம் அதிக லாபத்தில் இயங்க கூடிய வாரியமாக மின் வாரியத்தை மாற்ற முடியும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: