போலீஸ், அறநிலையத்துறை அடுத்தடுத்து நடவடிக்கை : நெல்லை தைப்பூச மண்டபத்துக்கு திடீர் பூட்டு

நெல்லை: தாமிரபரணி புஷ்கர விழாவிற்கான கொண்டாட்டங்கள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், நெல்லையில் நேற்று தைப்பூச மண்டபத்திற்கு போலீசார் திடீர் பூட்டு போட்டனர்.

தாமிரபரணி ஆற்றில் 144 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மகாபுஷ்கர விழா வரும் அக்டோபர் 11ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. இந்நதிக்கரையில் உள்ள 144 தீர்த்தக் கட்டங்களில் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நெல்லை கைலாசபுரத்தில் தைப்பூச மண்டபம் மற்றும் அதையொட்டியுள்ள மண்டபங்கள், ஆற்றோர கரைகள் சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. தைப்பூச மண்டபத்தில் சிற்பங்களை புதுப்பிக்கும் பணிகள் இரு தினங்களாக நடந்தன. இப்பணிகளை ஆதீனங்கள் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இந்நிலையில் நேற்று காலையில் அங்கு மண்டபத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்தன. அப்போது அங்கு வந்த டவுன் ேபாலீஸ் உதவி கமிஷனர் கிருஷ்ணசாமி, பாலம் சப் இன்ஸ்பெக்டர் இசக்கித்துரை ஆகியோர் வேலை ஆட்களை வெளியேற்றினர். மண்டபத்திற்கு தாங்கள் கொண்டு வந்திருந்த பூட்டை போட்டுவிட்டு சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து மண்டபம் முன்பு தாமிரபரணி புஷ்கர கமிட்டி குழு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் திரண்டனர். வேலூர் முன்னாள் கலெக்டரும், புஷ்கர விழா துணை தலைவருமான ராஜேந்திரன், நெல்லை முன்னாள் மேயர் புவனேஸ்வரி உட்பட பலர் வந்து விசாரித்தனர்.

தைப்பூச மண்டபத்திற்கு பூட்டு போட போலீசாருக்கு உரிமையில்லை, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தைப்பூச மண்டபம் குறித்து எந்த முடிவையும் அத்துறையே மேற்கொள்ள வேண்டும் எனவும், நெல்லையப்பர் கோயில் தீர்த்தவாரி ஆண்டுக்கு இருமுறை நடக்கும் இடத்தில் புஷ்கர விழா நடத்த உரிமையில்லையா எனவும் கேள்வி எழுப்பினர். இதன் காரணமாக போலீசார் மீண்டும் மண்டபத்தை திறந்து வைத்து விட்டு சென்றனர்.சுமார் ஒரு மணி நேரம் கழித்து அங்கு வந்த அறநிலையத்துறையின் டவுன் பிள்ளையன் கட்டளை அதிகாரிகள் குழு கலெக்டர் உத்தரவு என்று கூறி மீண்டும் பூட்டு போட்டனர். ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதோடு, சிற்பங்களை சுத்தம் செய்த இயந்திரங்களும் அங்கிருந்து அகற்றப்பட்டன. இதுதொடர்பாக புஷ்கர விழாக்குழுவினர் நேற்று மாலை கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: