சென்னையில் 30ம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

சென்னை: சென்னையில் வருகிற 30ம் தேதி 7 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்ளும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்ேபட்டையில் உள்ள அந்த கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த  தலைவர்கள் மதுசூதனன், வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி மற்றும் அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பின் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே வெளிப்படையாக மத்திய அரசிடம், தான் செய்த நிலைப்பாட்டுக்கு அந்த போர் குற்றத்துக்கு திறந்த வாக்குமூலத்தை கொடுத்துள்ளார்.

அதை கண்டித்து அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை போருக்கு காரணமாக இருந்தவர்களை போர் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  அறிக்கை வெளியிட்டிருந்தார். இதுகுறித்த ரகசியங்களை ராஜபக்சே தற்போது வெளியிட்டுள்ளார். இலங்கை படுகொலையை சர்வதேச குற்றமாக கருதி சம்பந்தப்பட்டவர்களை போர்க்குற்றவாளிகளாக தண்டிக்க வேண்டும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாக அதிமுக சார்பில் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் தீர்மானத்தின் விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும். தமிழர்களுக்கு உரிமையான எல்லா ஏற்பாடுகளையும் இந்த அரசு தொடர்ந்து செய்யும். எப்படியாவது  இந்த ஆட்சியை கலைத்துவிட வேண்டும் என்று உண்மைக்கு மாறான குற்றங்களை போராட்ட வழியில் திமுக நடத்திக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து மத்திய அரசுக்கு வலியுறுத்துவோம்.

அதேபோல் தீர்மானத்தின்  அடிப்படையில் வரும் 25ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும்.இவ்வாறு முனுசாமி தெரிவித்தார்.பேட்டியின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘’எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா  சென்னை நந்தனம் ஒய்எம்சியில் வரும் 30ம்  தேதி சிறப்பாக நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 7 லட்சம்  தொண்டர்கள், பொதுமக்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: