நைஜீரியாவை மூழ்கடித்த வெள்ளம்...... 100 பேர் பலி: தேசிய பேரிடராக அறிவிப்பு

நைஜீரியாவில் அண்மையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பல்வேறு மாகாணங்கள் நீரில் மூழ்கின. இந்த மழை, வெள்ளத்தை அந்நாட்டு அரசு தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. பருவமழை தீவிரமடைந்து அதிகளவு கொட்டித் தீர்த்ததால் நைஜீரியாவின் நைஜர், பெனு ஆகிய இரண்டு நதிகளின் கரைகள் உடைந்து வெள்ளநீர் ஊருக்குள் புகுந்தது. வெள்ளத்தால் 10 மாகாணங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் இருந்த 1 லட்சம் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 10 மாநிலங்களில் முதற்கட்டமான வந்த உயிரிழந்தோர் பட்டியலில் 100-க்கும் மேற்பட்டோர் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, தேசியப் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள நிவாரண பணிக்காக ரூ.60 கோடியை அதிபர் முகமது புகாரி ஒதுக்கியுள்ளார். மீட்பு பணியில் ராணுவமும், போலீசாரும் மீட்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2012-ல் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் 363 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: