எச்.ராஜா மனநிலை பாதிக்கப்பட்டவர் நோட்டோவுடன் போட்டியிட்ட பாஜ இன்னும் பாதாளத்துக்கு செல்லும்: டி.டி.வி.தினகரன் கடும் தாக்கு

சென்னை: எச்.ராஜா மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், நோட்டோவுடன் போட்டியிட்ட பாஜ இன்னும் பாதாளத்துக்கு செல்லும் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். அமமுக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னையில் நேற்று அளித்த பேட்டி

பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா ஏதோ மனநிலை பாதிக்கப்பட்டவர் போல இருக்கிறார். பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார். இவர் தான் இந்து மாதிரியும்,  இந்து மதத்தை காக்க வந்த பகவான் கிருஷ்ணர் மாதிரியும் பேசுகிறார். அவர் படித்தவர், ஆடிட்டர் என்று கேள்விப்பட்டேன். ஆனால் உயர் நீதிமன்றத்தை இவ்வளவு தரக்குறைவாக பேசுகிறார்.

இந்த மனநிலையில் உள்ளவர் எப்படி தனது மதத்தை பாதுகாக்கிறேன் என்று சொல்ல முடியும்.

 பாஜவினர் ஏற்கனவே நோட்டோவுடன் போட்டி போட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்னும் பாதாளத்துக்கு தான் போவார்கள். மதவெறியை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தமிழ்நாட்டில் அவர்களுக்கு இடம் இல்லை. தமிழகத்தில் தற்போது இருக்கும் அரசாங்கம் டெல்லியோட அடிமை அரசாங்கம். எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசினார். காவல்துறை சுதந்திரமாக விட்டது. எச்.ராஜா மீது இந்த அரசு எந்த  நடவடிக்கையும் அரசு எடுக்காது. நீதிமன்றத்துக்கு பயந்தே தனிப்படை  அமைக்கப்பட்டுள்ளது. மத்தியில் உள்ளவர்களின் கால், கையை பிடித்து இங்கே  ஆட்சி தொடரனும் என்று நினைக்கிறார்கள்.

மத்தியில் உள்ளவர்களும் இங்கே அடிமை  கிடைத்திருக்கிறார்கள், நாமும் இங்கே வர முடியாது என்று இருக்கும் வரை  ஒட்டி கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். எச்.ராஜா விவகாரத்தில் நீதிமன்றம் கண்டித்து விடுமோ என்ற பயத்திலே தான் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி டி.டி.வி.தினகரன்  10 ஆண்டு கட்சியிலே இல்லை என்று கூறியிருக்கிறார். எனக்காக எதுக்கு வேனிலும், ஜீப்பிலும், ஆட்டோவிலும் தொற்றிக் கொண்டு ஓட்டு கேட்டார்கள். அன்றைக்கு அவர்களுக்கு தெரியாதா?   இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: