சில்லி பாயின்ட்...

* சிறப்பாக செயல்படாத வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படாது. அவர்களுக்கு பதிலாக திறமையான இளம் வீரர்களை தேர்வு செய்ய தயங்கமாட்டோம் என்று இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறியுள்ளார்.

* விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடருக்கான சவுராஷ்டிரா அணியில் நட்சத்திர வீரர்கள் செதேஷ்வர் புஜாரா, ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளனர்.

* ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் விராத் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டது குறித்து அணியின் ஸ்பான்சர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* செர்பிய அணியுடனான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா 0-4 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது.

* இங்கிலாந்து அணியுடன் நடந்த டெஸ்ட் தொடரில் நம்பர் 1 அணியான இந்தியா 1-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்ததை அடுத்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்ற பல பிரபலங்கள் வலியுறுத்தியுள்ள நிலையில், முன்னாள் வீரர் சேதன் சவுகானும் அதே கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: