காஞ்சிபுரத்தில் பரபரப்புஅண்ணா நினைவு பூங்காவில் கல்வெட்டுகள் சேதம்: மர்மநபர்களுக்கு வலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள அரசு கல்வெட்டுகளை மர்மநபர்கள் உடைத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி, காஞ்சிபுரத்தில் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதையொட்டி, காஞ்சிபுரம், பிள்யைார்பாளையம் மடம் தெருவில் பல கோடி மதிப்பில் குழந்தைகள் , பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நினைவு நூற்றாண்டு பூங்கா அப்போதைய தமிழக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் திறந்து வைத்தார்.இந்த பூங்காவில், சிறுவர்கள் விளையாடி மகிழ விளையாட்டு சாதனங்கள், மூத்த குடிமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள திடல்கள், இளைஞர்கள் தங்களது திறமைகளை பொதுமக்களிடையே வெளிபடுத்தும் வகையில் அரங்கங்கள், பார்வையாளர் அமர புல்வெளிகள், கண்காட்சி கூடங்கள்  அமைக்கப்பட்டன. இதனை, காஞ்சிபுரம் பெருநகராட்சி தற்போது வரை பராமரிக்கிறது.இந்நிலையில் பூங்கா துவக்கம் குறித்து அங்கு அமைக்கப்பட்ட கல்வெட்டில் திட்ட மதிப்பீடு மற்றும் திறப்பாளர்கள் அரசு அதிகாரிகள் பெயர் பொறிக்கப்பட்டு, பூங்கா உள்ளே  கல்வெட்டு அமைக்கப்பட்டது. அந்த கல்வெட்டுக்களை, நேற்று முன்தினம் மர்மநபர்கள் முற்றிலும் உடைத்து சேதப்படுத்தினர். மாலையில், பூங்காவை திறக்க வந்த ஊழியர்கள் கல்வெட்டு சேதமடைந்ததுதை கண்டு அதிர்ச்சியடைந்தனா். தகவலறிந்து, காஞ்சிபுரம் நகராட்சி அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது, திமுக அமைச்சர்கள் பெயர் இதில் இடம்பெற்று இருந்ததாகவும், இதை சேதப்படுத்தினால் மீண்டும் வைக்கமாட்டார்கள் என மர்மநபர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. பின்னர், காஞ்சிபுரம் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கல்வெட்டை சேதப்படுத்திய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.  இதற்கிடையில், சம்பந்தப்பட்டவர்களை, உடனடியாக கைது செய்ய வேண்டும் என திமுகவினர் வலியுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது….

The post காஞ்சிபுரத்தில் பரபரப்புஅண்ணா நினைவு பூங்காவில் கல்வெட்டுகள் சேதம்: மர்மநபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: