சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10 ஆயிரம் சாலை பணியாளர்கள் கோட்டை நோக்கி பேரணியாக செல்கின்றனர். அவர்கள், முதல்வரை சந்தித்து மனு அளிக்கின்றனர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையில் 16 ஆயிரம் சாலை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பணியாளர்களை கடந்த 2002ல் பணி நீக்கம் செய்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை பணியாளர்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தினர் மேலும், சாலை பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சாலை பணியாளர்களை பணி நீக்கம் செய்தது சட்டத்திற்கு புறம்பானது என்று தீர்ப்பளித்தது. ஆனாலும், தமிழக அரசு இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது.
இதை எதிர்த்து சாலை பணியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தமிழக அரசு வாபஸ் பெற்றது. இந்த நிலையில், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும். இறந்த சாலை பணியாளர்களின் குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது வரை போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் தற்போது வரை அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் மாநில சாலைகளின் பராமரிப்பு அனைத்து தனியார் கான்ட்ராக்டர்களிடம் தமிழக அரசு கொடுத்து வருகிறது. இதன் காரணமாக, 10 ஆயிரம் சாலை பணியாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சாலை பணியாளர்கள் பணியிடங்களை குறைக்க கூடாது,
41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7ம் தேதி 10 ஆயிரம் சாலை பணியாளர்கள் பேரணியாக சென்று முதல்வரிடம் மனு அளிக்க தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாநில தலைவர் சண்முக ராஜா கூறும் போது, 5 ஆயிரத்திற்கும் ேமற்பட்ட சாலை பணியாளர்கள் காலி பணியிடங்களை நிரப்பி படித்த இளைஞர்களுக்கு அரசு துறையில் வேலை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 7ம் தேதி தலைமை செயலகம் நோக்கி சாலை பணியாளர்கள் பேரணியாக சென்று முதல்வரிடம் மனு அளிக்கவுள்ளோம். இதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் குடும்பத்தோடு பங்கேற்கின்றனர். கேரளாவிற்கு உதவிடும் பொருட்டு 10 ஆயிரம் சாலை பணியாளர்கள் ஒரு நாள் ஊதியத்தை தருகின்றனர்’ என்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி