வடகொரிய-தென்கொரிய அதிபர்களிடையே செப்டம்பரில் பேச்சுவார்த்தை

பியாங்யாங்: கொரிய நாடுகளின் தலைவர்கள் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் இடையே கடந்த ஏப்ரலில் முதல் முறையாக சந்திப்பு நிகழ்ந்தது. எல்லையில் உள்ள பன்முன்ஜோம் கிராமத்தில் இருவரும் சந்தித்து  நட்பு பாராட்டினர். இதை தொடர்ந்து மே மாதத்ததில் இரண்டாவது சந்திப்பு நிகழ்ந்தது. இந்த நிலையில் இரு நாட்டு அதிபர்கள் இடையே மீண்டும் ஒரு சந்திப்பை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் இருநாட்டு அதிகாரிகளும் இன்று ஈடுபட்டனர்.

அதில் அதிபர்கள் சந்தித்துக் கொள்ளும் நேரம், இடம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன்படி, வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில் செப்டம்பர் மாதம் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அணுஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் தயாரிப்பில் வடகொரியா ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையேயான சந்திப்பின் போது கொரியா தீபகற்பத்தில் அணுஆயுத சோதனை நடத்தப்படாது என வடகொரியா சார்பில் உறுதியளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: