லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்வதால் காய்கறிகள், மூலப்பொருட்கள் கொண்டு வருவதில் சிக்கல் : அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை : லாரிகள் ஸ்டிரைக் காரணமாக காய்கறிகள், முட்டைகள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று சென்னையில் அவர் அளித்த பேட்டி: அகில இந்திய அளவில் லாரிகள் வேலைநிறுத்தம் தொடர்ந்து 7வது நாட்களாக நீடிக்கிறது. முட்டைகள், காய்கறிகள், தொழிற்சாலை மூலப்பொருட்கள்  நிறைய தேக்கம் ஏற்பட்டுள்ளது.தற்போது கூட்டம் குறைவான நேரங்களில் பேருந்துகளில் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. வேறு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது போராட்டம் தீவிரமாக உள்ளது. 515 புதிய பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டது.

அதில் சின்ன சின்ன பிரச்னைகள் காரணமாக பேருந்துகள் இடையில் நின்று விட்டது. அதை உடனுக்குடன் சரிசெய்து இயக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது பத்திரிகைகளில் தவறான செய்திகள் வருகிறது. தரமான பேருந்துகளாகத்தான் இயக்கப்பட்டுள்ளது. விரைவில் 500 பேருந்துகள் இயக்கப்படும். அதற்கு அடுத்தபடியாக 3 ஆயிரம் பேருந்துகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் 5 ஆயிரம் பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு புதிய பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: