ஜோஸ் பட்லர் சதத்தில் ஆஸ்திரேலியா ஒயிட் வாஷ்

மான்செஸ்டர்: ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த 5வது ஒருநாள் போட்டியில், ஒரு விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற இங்கிலாந்து 5-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆஸி. 34.4 ஓவரிலேயே 205 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பிஞ்ச் 22, ஹெட் 56, அலெக்ஸ் கேரி 44, ஷார்ட் 47* ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் மொயீன் அலி 4 விக்கெட், சாம் கரன் 2, பிளங்கெட், ரஷித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 114 ரன்னுக்கு 8 விக்கெட் இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. இந்த நிலையில், உறுதியுடன் போராடிய ஜோஸ் பட்லர் - அடில் ரஷித் ஜோடி 9வது விக்கெட்டுக்கு 75 ரன் சேர்த்தது. ரஷித் 20 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். மிகவும் பரபரப்பாக அமைந்த இப்போட்டியில் இங்கிலாந்து 48.3 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 208 ரன் எடுத்து வென்றது. பட்லர் 110 ரன் (122 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்), பால் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து 5-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி ஒயிட் வாஷ் சாதனை நிகழ்த்தியது. ஜோஸ் பட்லர் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தட்டிச் சென்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: