சுருக்குமடி வலை பயன்படுத்த அனுமதி கோரி அமைச்சரை முற்றுகையிட்ட மீனவர்கள்

கடலூர்: கடலூரில் சுருக்குமடி வலைக்கு தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ள நிலையில் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி அமைச்சர் சம்பத்தை 4 கிராம மக்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் சிலர் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி  மீன் பிடிப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தது. எனவே, தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை கண்டிப்பாக மீனவர்கள் பயன்படுத்த கூடாது என ஆட்சியர் தண்டபாணி உத்தரவிட்டார். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். ஆட்சியரின் எச்சரிக்கையை தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியவில்ைல.

இந்நிலையில் நேற்று முன்தினம் கடலூர் வந்த தொழில்துறை அமைச்சர் சம்பத்தை தாழங்குடா, தேவனாம்பட்டினம் உள்ளிட்ட 4 மீனவ கிராம மீனவர்கள் முற்றுகையிட்டு, சுருக்குமடி வலை பயன்படுத்தாததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு மீன்பிடிக்க சுருக்குமடி வலை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதைதொடர்ந்து அமைச்சர் சம்பத் மீனவ கிராம பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம்

Related Stories: