தஞ்சை : தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் கதண்டு வண்டு தாக்கியதில் 2 பக்தர்கள் காயமடைந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோயில் வளாகத்தில் கதண்டு வண்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
