சென்னை: சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உணவகங்கள், பேக்கரிகள், இறைச்சி கடைகள் உணவு வழங்குவதற்கான தர நிர்ணய சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும். உணவகங்கள் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், உரிமம் பெறாமலும், காலாவதியான உரிமத்தை புதுப்பிக்காமலும் செயல்படும் உணவகங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் உரிமையாளர்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:சென்னையில் உணவகங்கள், சூப்பர் மார்க்கெட், இறைச்சி, பழம், இனிப்பு கடைகளில் முறையாக உரிமம் பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். உரிமம் புதுப்பிக்கப்படாமலும், உரிமம் பெறாமலும் இருக்கும் கடை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.சென்னையில், உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் பெறாமல் நடத்தப்படும் அனைத்து உணவகங்களுக்கும் உணவு பாதுகாப்பு சட்டம் 2006, பிரிவு 63ன் படி 6 மாதம் வரை சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்க முடியும். எனவே, சென்னையில் இதுவரை உணவு தொழில் சார்ந்த உரிமம் பதிவு பெறாதவர்கள் உடனடியாக புதுப்பிக்க வேண்டும். ஆசியாவில் மிகப் பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலைத்தில் உள்ள அனைத்து உணவகங்களில் உணவு பொருளை பிளாஸ்டிக் பைகளால் பயன்படுத்தவது தெரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கோயம்பேடு மார்க்கெட்டில் கலப்பட டீத்தூள், எண்ணெய் செயற்கை வண்ணம் கலந்த உணவுகள் மற்றும் புகையிலை பொருட்கள் பிளாஸ்டிக் சம்பந்தமான புகார்கள் இருந்தால் 9444042322 என்ற நம்பரில் புகார் தெரிவிக்கலாம்….
The post உரிமம் பெறாமல் உணவகம் நடத்தினால் ரூ.5 லட்சம் அபராதம்; 6 மாதம் சிறை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எச்சரிக்கை appeared first on Dinakaran.
