நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களின் நலனில் மத்திய அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை: கனிமொழி எம்பி தாக்கு

சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களின் நலனில் மத்திய அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை என கனிமொழி கூறினார்.திமுக எம்பி கனிமொழி, தூத்துக்குடியில் இருந்து நேற்று மதியம் 1.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டி: நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லை என தமிழக மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில் சொல்லிக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில்,  அவர்களின் உணர்வுகளுக்கு எதிராக நீட் தேர்வை தமிழகத்தில் திணித்துவிட்டு, அந்த தேர்வுகள் எழுத கூடிய மையம் எதுவுமே தமிழகத்தில்  இல்லாமல், எர்ணாகுளம், ஐதராபாத், ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தமிழக மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்பது, அதிலும்  கிராமப்புற மாணவர்கள், குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட இளம்பெண்களும், மாணவர்களும் எப்படி தனியாக அவ்வளவு தூரம் சென்று தேர்வு எழுத  முடியும் என்பதை மத்திய அரசு சிந்தித்து பார்க்க வேண்டும்.அவ்வளவு தூரம் சென்று தேர்வு எழுதுவதற்கு, எல்லோருக்கும் பொருளாதாரம் கிடையாது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், தமிழக மக்களின் குறிப்பாக  தமிழக மாணவர்களின் நலனில் மத்திய அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறதுஇவ்வாறு கூறினார்.

Related Stories: