மது வேண்டாம் பால் குடியுங்கள்! பாஜக மாஜி முதல்வர் அறிவுரை

போபால்: ‘மதுவை குடிக்க வேண்டாம்; அதற்கு பதிலாக பசுவின் பாலை மக்கள் குடிக்க வேண்டும்’ என்று பாஜக முன்னாள் முதல்வர் உமா பாரதி கூறினார். மத்திய பிரதேச மாநிலம் போபால் அடுத்த பெதுல் நகர் வந்த முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான உமா பாரதி, நிருபர்களிடம் கூறுகையில், ‘மதுவை குடிக்க வேண்டாம்; அதற்கு பதிலாக பசுவின் பாலை மக்கள் குடிக்க வேண்டும். மதுபான கடைகளை மூடிவிட்டு மாட்டுக் கொட்டகைகளை கட்டவேண்டும். மத்திய பிரதேசத்தில் இயற்கை விவசாயம் வேகமாக அழிந்து வருகிறது. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் கால்நடைகளை வளர்க்க வேண்டும். வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், தொழிலாளர்கள் குடியிருப்பு, மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் மதுபானக் கடை இருக்கக்கூடாது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. ஆனால் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் மதுபான மாபியாக்களின் பாக்கெட்டுகளில் உள்ளனர். மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் அரசு, விரைவில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தும் என்று நம்புகிறேன்’ என்று கூறினார்….

The post மது வேண்டாம் பால் குடியுங்கள்! பாஜக மாஜி முதல்வர் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: