முல்லைப் பெரியாறு அணையின் அவசர கால நெருக்கடிகளை எதிர்கொள்ள சிறப்பு குழு அமைக்கிறது நீர்வள அமைச்சகம்

டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் அவசர கால நெருக்கடிகளை எதிர்கொள்ள சிறப்பு குழு ஒன்றை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணைக்கு சேதம் ஏதும் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வது குறித்து இந்த உயர்மட்ட குழு திட்டமிடும் என்று மத்திய நீர்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயர்மட்ட குழுவின் அதிகாரங்கள் குறித்து மத்திய நீர் ஆணையம் அளித்த பரிந்துரைகளை, நீர்வள அமைச்சகம் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்திற்கு அனுப்பிவைத்துள்ளது.

இதனடிப்படையில் பாதுகாப்பு குழுவின் அதிகாரங்கள் நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது. குழுவில் 14 உறுப்பினர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்குழுவில் தகவல் தொடர்பு, மருத்துவம், சுகாதாரம், நீர்வளம் உள்ளிட்ட துறைகளின் நிபுணர்கள் இடம்பெறவுள்ளனர். முல்லைப் பெரியாறு பாதுகாப்பு குழுவுக்கு உதவி செய்வதற்காக தமிழகம் மற்றும் கேரள அரசுகள் சார்பில் தனித்தனி குழுக்கள் அமைக்கவும் உத்தரவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: