சர்ச்சை சாமியார் ஆஸ்ராம் பாபு மீதான பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு : பதற்றம் நிலவுவதால் 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

ஜோத்பூர்:  சர்ச்சைக்குரிய சாமியார் ஆஸ்ராம் பாபு மீதான வழக்கில் தீர்ப்பு இன்று வெளியாகிறது. இதனால் 3 மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது . ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வந்தவர் சாமியார் ஆஸ்ராம் பாபு. 75 வயதான இவர் மீது,  ஆசிரமத்தில் தங்கியிருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம் சாமியார் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆஸ்ராம் பாவுவை கைது செய்தனர். மேலும், குஜராத்தில் ஆஸ்ராம் பாபுவுக்கு சொந்தமான ஆசிரமத்தில் இரு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஆசாராம் பாபு, அவரது மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சாமியார் ஆஸ்ராம் பாபு தற்போது ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜோத்பூரில் நடந்து வரும் பலாத்கார வழக்கில் அரசு தரப்பில் 44 சாட்சிகளிடமும், சாமியார் தரப்பில் 31 சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இறுதிக்கட்ட விசாரணை தற்போது முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகிறது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஆஸ்ராம் பாபுவுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. பஞ்சாபில் பலாத்கார வழக்கில் சிக்கிய சாமியார் ராம் ரஹிம் மீதான தீர்ப்புக்கு முன்னரே அவரது ஆதாரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். எனவே சாமியார்  ஆஸ்ராம் பாபுவுக்கு ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பெருமளவு ஆதரவவாளர்கள் உள்ளதால் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: