வாட்ஸ் அப்பில் வைரலான ஆடியோ பிரதமருக்கு ெகாலை மிரட்டல் விடுத்தவர் கைது: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்

கோவை: பிரதமரை கொல்லப்போறோம் என பேசியவர் கைது செய்யப்பட்டார். இவர் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (35) கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளரிடம் 3 கார்களை அடமானம் வைத்து ₹2 லட்சம் கடன் வாங்கினார்.

கார்களை மீட்க பணத்துடன் வந்த பிரகாஷிடம் உக்கடத்தை சேர்ந்த ஒருவரிடம் கார் இருக்கிறது. அவரிடம் பணத்தை கொடுத்து கார்களை மீட்கலாம் என டிராவல்ஸ் உரிமையாளர் கூறியுள்ளார்.

அதையடுத்து, பிரகாஷ், உக்கடத்தை சேர்ந்த நபரை தொடர்பு கொண்டு பேசிய விவகாரம் வாட்ஸ் அப், பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. அதில் பேசியவர் ‘‘என்னைய சாதாரணமாக நெனைச்சுட்டியா, ₹5 லட்சம் கொடுத்தா உன் வண்டி கிடைக்கும். உனக்காக ஒரு லட்சம் குறைச்சிருக்கிறேன். என் மீது 22 கேஸ் இருக்கு. எனக்கு உன் மாதிரி ஆளுங்கள மிரட்டி புடுச்சு காசு வாங்குற பழக்கம் கிடையாது. என்னோட லெவல் வேற மாதிரி. நான் யாரு தெரியுமா, அத்வானிக்கு குண்டு வெச்சது யாருன்னு நெனைக்கிறே. என்.ஐ.ஏ விசாரணைய பாத்துட்டேன். அடுத்து மோடிய கொல்லப்போறோம். இது உனக்கு தெரியுமா’’ என மிரட்டலாக பேசியுள்ளார். நான் பேசுறத டேப் பண்ணிக்கோ எந்த இடத்தில வேணாலும் வந்து வண்டிய தூக்குவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனிடையே,, குனியமுத்தூர் சாரமேடு பகுதியைச் சேர்ந்த ரபீக்(50) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். கைதான ரபீக், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறைக்கு சென்றவராவார்.

Related Stories: