ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்சை இணை ஒருங்கிணைப்பாளராகவே அங்கீகரித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்: 16ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு

சென்னை: இந்திய தேர்தல் ஆணையம் ஓபிஎஸ்சை ஒருங்கிணைப்பாளராகவும், இபிஎஸ்சை இணை ஒருங்கிணைப்பாளராகவே இன்று வரை அங்கீகரித்துள்ளது. இந்த நிலையில், இரண்டு பேரையும் 16ம் தேதி டெல்லியில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு வரும்படி தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. புலம் பெயர்ந்தவர்கள், அவர்கள் வேலை பார்க்கும் மாநிலங்களில் ஓட்டு போட ‘ரிமோட் வாக்களிப்பு’ வசதியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் செயல்முறை விளக்கம் அளிக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ஜனவரி 16ம் தேதி டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.இந்த கூட்டத்தில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகளுக்கும், 57 மாநில கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்தில் உள்ள 5 கட்சிகளுக்கு டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்க கடிதம் அனுப்பி உள்ளார். அதன்படி, தமிழகத்தில் திமுக கட்சி தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. இதுதவிர தேமுதிக பொதுச்செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த 5 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் 16ம் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள். இந்திய தேர்தல் ஆணையம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தையும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி என்றே இன்றும் கருதி வருகிறது. இந்திய சட்ட ஆணையம் கடந்த புதன்கிழமை எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அறிவித்துள்ளதாக எடப்பாடி அணியினர் கூறி வந்தனர். இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் நேற்றைய அறிவிப்பு எடப்பாடி அணியினருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சட்ட ஆணையம் கடந்த புதன்கிழமை எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அறிவித்துள்ளதாக எடப்பாடி அணியினர் கூறினர்….

The post ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்சை இணை ஒருங்கிணைப்பாளராகவே அங்கீகரித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்: 16ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: