வட கொரியாவில் மக்கள் சிரிக்க கூடாது: அதிபர் அதிரடி உத்தரவு

பியாங்யாங்: சர்வாதிகார சட்டங்கள் அமலில் உள்ள வடகொரியாவில் மக்கள் சிரிப்பதற்கும் மது அருந்துவதற்கும் தடை விதித்து அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். அவரது தந்தையும் வடகொரியாவின் முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கிம் ஜாங் இல்-ன் 11வது நினைவு தினம் கடந்த 17ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. நினைவுதினத்தை முன்னிட்டு, 11 நாட்களுக்கு அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாட்களில் மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த 11 நாள்களில், குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் கூட, அவரது உறவினர்கள் சத்தம் போட்டு அழக் கூடாது, மெதுவாகவே அழவேண்டும். இந்த தடையை மீறுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன….

The post வட கொரியாவில் மக்கள் சிரிக்க கூடாது: அதிபர் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: