போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் இலங்கை பெண்கள் 2 பேர் சிக்கினர்

சென்னை: இலங்கை யாழ்ப்பாணம் நகருக்கு போலி பாஸ்போர்ட் மூலமாக செல்ல முயன்ற 2 பெண்களை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து நேற்றுமுன்தினம் இலங்கை யாழ்ப்பாணம் நகருக்கு செல்ல அல்லையன்ஸ் ஏர் பயணிகள் விமானம் தயார் நிலையில் இருந்தது. எனவே, பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது சென்னை முகவரி கொண்ட, இந்திய பாஸ்போர்ட்டுடன் கங்கா சுந்தரதாசன் (46), சொர்ணகலா சுந்தரேசன் (22) என்ற 2 பெண்கள் சுற்றுலா விசாவில் யாழ்ப்பாணம் செல்வதற்கு வந்தனர். அவர்களின்மீது குடியுரிமை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களின் பாஸ்போர்ட்டுகளை கம்ப்யூட்டர் மூலமாக ஆய்வு செய்ததில், அவை இரண்டும் போலி எனத் தெரியவந்தது.  அவர்களது பயணத்தை ரத்து செய்தனர். விசாரணையில், இந்த 2 பெண்களும் இலங்கையை சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா விசாவில் சென்னைக்கு வந்து, இங்கேயே நிரந்தரமாக தங்கியுள்ளனர். இதனால் அவர்கள் ஏஜெண்டுகளிடம் அதிக பணம் கொடுத்து, போலியாக இந்திய பாஸ்போர்ட் பெற்றுள்ளனர். இதன்மூலம் அவர்கள் சென்னையில் இருந்து சுற்றுலா விசாவில் யாழ்ப்பாணத்துக்கு செல்ல முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து,  குடியுரிமை அதிகாரிகள், கியூ பிராஞ்ச் போலீசார், மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் 2 பெண்களிடம் தீவிரமாக விசாரித்தனர். 2 பெண்களையும் கைது செய்து, மேல் நடவடிக்கைகக்காக நேற்று அதிகாலை சென்னை குற்றப்பிரிவு போலீசில் குடியுரிமை அதிகாரிகள் ஒப்படைத்தனர்….

The post போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் இலங்கை பெண்கள் 2 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Related Stories: