திண்டுக்கல் அருகே கிடைத்தது 17ம் நூற்றாண்டு நடுகல்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கிபி 17ம் நூற்றாண்டை சேர்ந்த கணவன், மனைவி நடுகல்லை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். திண்டுக்கல் வரலாற்று ஆய்வுக்குழு ஆய்வாளர் விஸ்வநாததாஸ், வரலாற்று மாணவர் ரத்தினமுரளிதர், வரலாற்று ஆர்வலர்கள் சந்திரசேகர், உமா மகேஸ்வரன் ஆகியோர் கொண்ட குழுவினர், திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டியிலிருந்து வி.மேட்டுப்பட்டி செல்லும் சாலை குளக்கரையில் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு வீட்டினுள் இருந்த கணவன்- மனைவி நடுகல்லை கண்டறிந்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘குளக்கரையில் கண்டறியப்பட்ட கணவன், மனைவி நடுகல் 17ம் நூற்றாண்டை சேர்ந்தவை. ஒரு குகை போன்ற கல் வீட்டினுள் அமைந்துள்ள இந்த நடுகல்லின் இடது புறம் ஆண் சிற்பத்தில் தலையில் அள்ளி முடிந்து சவுரி கொண்டையும், அக்கொண்டை முடிச்சில் தொங்கும் குஞ்சமும், ஆணின் காதில் வளை குண்டலமும், இரு கரமும் மார்போடு இணைந்து கும்பிட்ட நிலையும், இடையில் வாள் இடைவாரிலிருந்து நீண்டும் தொங்குகிறது. இடுப்பில் இடை கச்சை ஆடை, தார் பாச்சி கட்டிய அமைப்பும் அதிலிருந்து கெண்டை கால் வரை மூடிய நிலையில் இடை கச்சை ஆடையுள்ளது. பெண் சிற்பத்தில் கொண்டை வலது புறமும், காதில் வளைகுண்டலமும், நெஞ்சில் ஆரமும், மார்பில் கச்சையும், இடது கை தொங்கு கரம் (டோலி முத்திரையும்), வலது கரம் இடுப்பில் வைத்தபடியும், இடை ஆடை இடுப்பில் சுற்றி கெண்டை கால் வரை நீண்டுள்ளது. இந்த நடுகல்லில் உள்ள ஆண், இப்பகுதியில் நாயக்கர் அரசின் நிர்வாகத்தில் முக்கிய நிர்வாகியாக இருந்திருப்பார்’’ என்றனர்….

The post திண்டுக்கல் அருகே கிடைத்தது 17ம் நூற்றாண்டு நடுகல் appeared first on Dinakaran.

Related Stories: