சட்டமன்ற தேர்தல் 2021: எடப்பாடியில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் சம்பத்குமார் வேட்புமனு தாக்கல்..!!

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் சம்பத்குமார் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தின் முக்கிய தொகுதியாகவும், ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி உள்ள தொகுதியாகவும் விளங்கி வருகிறது எடப்பாடி சட்டமன்ற தொகுதி. தமிழக முதல்வரும், அதிமுக சார்பில் தற்போது முதலமைச்சர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ள பழனிசாமி போட்டியிடும் தொகுதி தான் எடப்பாடி சட்டமன்ற தொகுதி. இந்த தொகுதியில் கடந்த 15ம் தேதி முதல்வர் பழனிசாமி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த நிலையில் அவருக்கு எதிராக போட்டியிடும் திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள இளம் வேட்பாளர் சம்பத்குமார் தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார். வேட்பாளர் சம்பத்குமாருடன் சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி தலைமையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் ஊர்வலமாக சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர். எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் முதல்வர் பழனிசாமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொகுதி முழுவதுமாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.  தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளும் போது, எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு ஏராளமான திட்டப்பணிகளை 5 ஆண்டுகளில் செய்துள்ளேன் என்று அவர் பட்டியலிட்டு தெரிவித்தார். இந்நிலையில் தான் இப்பகுதியில் பழனிசாமியை எதிர்த்து களம் காணுகின்ற இளம் வேட்பாளர் சம்பத்குமார் வேட்புமனுவை தாக்கல் செய்தார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியை திமுக கைப்பற்றிவிடும் என்பதற்கு சான்றாக இன்று நடைபெற்ற பேரணியே உதாரணமாக அமைந்திருக்கிறது. …

The post சட்டமன்ற தேர்தல் 2021: எடப்பாடியில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் சம்பத்குமார் வேட்புமனு தாக்கல்..!! appeared first on Dinakaran.

Related Stories: