திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் கோலாகலம்: ‘தியாகேசா ஆரூரா’ என்ற கோஷத்துடன் பக்தர்கள் உற்சாகம்

திருவாரூரில் பங்குனிஉத்திர பெருவிழாவான இன்று திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் ஆழித்தேரோட்டம் நடைபெற்று வருகிறது. பக்தர்களின் ‘தியாகேசா ஆரூரா’ கோஷத்துடன் ஆழித்தேர் ஆடி அசைந்து வருகிறது. இந்த தேரானது ஆசியாவிலேயே பெரிய தேர் என்ற பெருமைக்குரியது. தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆழித் தேரோட்டத்தை முன்னிட்டு சுமார் 1500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

The post திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் கோலாகலம்: ‘தியாகேசா ஆரூரா’ என்ற கோஷத்துடன் பக்தர்கள் உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: