ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!

அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள ‘சிகுலி கார்டன் அண்ட் கிளாஸ்’ கண்ணாடிப் பூங்கா அருங்காட்சியகம். கண்ணாடியில் இப்படி ஒரு கலைநயம் காட்ட முடியுமா என்று நம் அனைவரையும் வியப்பிற்கு ஆழ்த்தும் வகையில் இந்த அருங்காட்சியகம் முழுதும் ‘ஸ்பேஸ் நீடில்’ அமைப்பு கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அப்படி என்ன பிரமாண்டம் இதில் உள்ளது என்று நினைக்க தோன்றும். இந்த பூங்கா முழுதும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட கலைநயம் என்று சொல்லிட முடியாது. அதற்கும் மேல் ‘கனவு காணும் நயம்’ என்று தான் சொல்ல வேண்டும். எத்தனை வண்ணங்கள், என்ன ஒரு தோற்றப் பொலிவு, தத்ரூபமாக செதுக்கப்பட்ட ஓவியர் திறமை இவையெல்லாம் நினைத்துப் பார்க்கவே அசாத்தியமாகத் தோன்றும். இத்தகைய கண்ணாடி ஓவியங்களை ‘டேல் சிகுலி’என்பவர் உள் அலங்காரத்தில் அறிமுகம் செய்தார்.

The post ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: